சுடச்சுட

  

  மூடநம்பிக்கைக்கு எதிராகப் பேசுவதால் என்னை மதவாதிகள் மிரட்டுகிறார்கள் என்று, நிடுமாமுடி மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்தார்.

  கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு, சமதாசைனில் தளம் சார்பில் பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

  மூடநம்பிக்கை தடைச் சட்டத்தை ஆதரித்தும், சுவாமிகள் அமர்ந்திருக்கும் பல்லக்கை தோளில் சுமக்கும் விழாவை எதிர்த்தும் பேசியதால் என்னை மதவாதிகள் மிரட்டுகிறார்கள். கொலை செய்துவிடுவதாகவும் தொலைபேசியில் எனக்கு மிரட்டல் வருகிறது.

  இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் அஞ்சமாட்டேன். நாகரீக சமுதாயத்தில் வாழ்கிறோமா என்று நினைக்க தோன்றும் அளவுக்கு கர்நாடகத்தில் உள்ள சில மடாதிபதிகள் பேசுகின்றனர். என் மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்களைக் கண்டு நான் பின்வாங்க மாட்டேன். மிரட்டல்கள் மூலம் எனது கருத்து சுதந்திரத்தைப் பறிக்க முடியாது.

  மூடநம்பிக்கை தடைச் சட்டத்தை மாநில அரசு கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். நமது சமுதாயத்தில் இருந்து மூடநம்பிக்கை ஒழிய வேண்டும். மூடநம்பிக்கையின் பெயரால் மக்கள் சுரண்டப்படுத்துவதையும், ஏமாற்றப்படுவதையும் அனுமதிக்க முடியாது.

  மூடநம்பிக்கை தடைச் சட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. சட்ட வரைவை படித்து பார்க்காமல் சிலர் அதை விமர்சிக்கிறார்கள். மூடநம்பிக்கையை வைத்து பிழைப்பு நடத்துவோர்

  இந்தத் தடைச் சட்டத்திற்கு எதிராக பேசுகின்றனர் என்றார் அவர்.

  கருத்தரங்கில் கர்நாடக சுவாமிகள் பேரவைத் தலைவர் சந்திரசேகர பாட்டீல், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் துவாரகநாத், கர்நாடக முன்னாள் அமைச்சர் மும்தாஸ் அலிகான், சைனிக் தளத்தின் தலைவர் வெங்கடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai