Enable Javscript for better performance
ரூ. 10,000 கோடிக்கு தொழில் முதலீடு: கர்நாடக உயர்நிலைக் குழு ஒப்புதல்- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 10,000 கோடிக்கு தொழில் முதலீடு: கர்நாடக உயர்நிலைக் குழு ஒப்புதல்

    By பெங்களூரு  |   Published on : 21st November 2013 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள தொழில்  முதலீடுகளுக்கு மாநில உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

    பெங்களூரு விதான செüதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற மாநில உயர்நிலைக் குழு கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.ஆர்.பாட்டீல், எம்.பி.பாட்டீல், கிருஷ்ண பைரேகெüடா, மாநில தலைமைச் செயலாளர் கெüசிக் முகர்ஜி, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அரவிந்த் ஜாதவ், எம்.என்.வித்யாசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் ரூ.10,044 கோடி மதிப்பிலான 10 தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், 14,105 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

    ஆட்டோமொபைல், வேதியியல், உணவு, இரும்பு, ஸ்டீல், தகவல் தொழில்நுட்பம், சர்க்கரை உள்ளிட்ட துறைகள் சார்ந்த தொழில் முதலீடுகள் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், பெல்காம், பெல்லாரி, தென் கன்னடம், கோலார், மண்டியா, தும்கூர் ஆகிய மாவட்டங்களில் செய்யப்படுவதாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai