அமைச்சர் சந்தோஷ்லாட் மீதான புகார் சித்தராமையாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது
By பெங்களூரு, | Published on : 22nd November 2013 05:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கர்நாடக செய்தித் துறை அமைச்சர் சந்தோஷ்லாட் மீதான சுரங்க முறைகேடு புகார் மனுவை முதல்வர் சித்தராமையாவின் கவனத்திற்கு அனுப்பியுள்ளேன் என்று ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக கர்நாடக செய்தித் துறை அமைச்சர் சந்தோஷ்லாட்டுக்கு எதிரான புகார் மனு கிடைத்தது. இந்த மனுவை முதல்வர் சித்தராமையாவின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளேன். ஆனால், இதுவரை அந்த மனு தொடர்பாக எவ்வித தகவலும் சித்தராமையாவிடமிருந்து எனக்கு வரவில்லை. முதல்வரின் பதில் கடிதம் கிடைத்ததும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பேன்.
எடிஎம் மையத்தில் வங்கி ஊழியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வேதனை அளிக்கிறது. இந்த விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையா, மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கரிடம் பேசியுள்ளேன்.
இந்தச் சம்பவம் பெங்களூரு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அனைத்து ஏடிஎம் மையங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.