சுடச்சுட

    

    ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை: முதல்வர் சித்தராமையா

    By பெங்களூரு  |   Published on : 22nd November 2013 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    இது குறித்து பெங்களூருவில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட வங்கிகள் வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி அவர்களுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளோம். புதன்கிழமை இது குறித்து உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தலைமையில் விதானசெüதாவில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. உடல்நிலை சரியில்லாததால் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை. ஏடிஎம் மையங்களில் தேவையான பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். ஏடிஎம் மையங்களில் மீண்டும் இதுபோன்றதொரு சம்பவம் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai