சுடச்சுட

  

  கர்நாடகத்தில் புதிதாக 15 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே

  By பெங்களூரு  |   Published on : 22nd November 2013 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் புதிதாக 15 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்தார்.

  இது குறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: உயர்கல்வியின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு, தேசிய உயர்கல்வி திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி கர்நாடகத்தில் புதிதாக 15 பல்கலைக்கழகங்கள், 20 மாதிரி பட்டக்கல்லூரிகள், பல்தொழில்நுட்பக்கல்லூரிகள் தொடங்கப்படும். ஆரம்ப மற்றும் மேல்நிலைகல்வி மேம்பாட்டுக்காக அனைவருக்கும்கல்வி திட்டம்மற்றும் தேசிய நடுநிலைகல்வி திட்டங்களை அறிமுகம் செய்ததுபோல, உயர்கல்வி மேம்பாட்டுக்காக தேசிய உயர்கல்வி திட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, உயர்கல்விநிறுவனங்களுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திதரப்படும்.

  புதிய திட்டத்தின்படி தொடங்கப்படும் பல்கலைக்கழகத்தின்கீழ் 100 கல்லூரிகள் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மாநிலத்தில் 3300 கல்லூரிகள் உள்ளன. தற்போது 12 பல்கலைக்கழகங்கள் உள்ளன. எனவே, கூடுதலாக 15 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும். இந்ததிட்டம் 12,13-ஆம் ஐந்தாண்டு திட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. 12-ஆவது ஐந்தாண்டுதிட்டத்தில் இத்திட்டத்திற்கு ரூ.23 ஆயிரம்கோடி, 13-ஆவது ஐந்தாண்டுதிட்டத்தில் ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. மாநிலத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி கிடைக்கும். உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மத்திய, மாநில அரசுகள் முறையே 65 சதம், 35 சதம் என்றளவில் பகிர்ந்து கொள்ளவேண்டும். எனவே, அடுத்த பட்ஜெட்டில் உயர்கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

  புதிதாக தொடங்கப்படும் 20 மாதிரி கல்லூரிகளுக்கு மத்திய அரசு தலா ரூ.12 கோடி நிதிஉதவி அளிக்கும். பழைய பல்தொழில்நுட்பக்கல்லூரிகளை புதுப்பிக்க தலா ரூ.2 கோடி கிடைக்கும். இந்த புதிய திட்டம் 2014 ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும்.

  இது குறித்துவிவாதிக்க நவ.25-ஆம் தேதி பெங்களூருவில் அனைத்துமாநில உயர்கல்வித்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. இதை மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம்ராஜூ தொடக்கிவைக்கிறார் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai