Enable Javscript for better performance
குற்றவாளி குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. ஒரு லட்சம் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    குற்றவாளி குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. ஒரு லட்சம் பரிசு

    By பெங்களூரு  |   Published on : 22nd November 2013 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் ஏடிஎம் மையத்தில் வங்கி பெண் மேலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி குறித்து தகவல் தருவோருக்கு ரூ. ஒரு லட்சம் பரிசாக அளிக்கப்படும் என்று கர்நாடக காவல் துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து பெங்களூருவில் மாநகரக் காவல் இணை ஆணையர் பி.கே.சிங் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

    பெங்களூருவில் கடந்த 19-ஆம் தேதி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற வங்கி பெண் மேலாளர் ஜோதியை அரிவாளால் தாக்கிவிட்டு, அவரிடமிருந்து கைபேசி, ரூ. 2,500 ஆகியவற்றை மர்ம நபர் பறித்துச் சென்றார்.

    இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஜோதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்க 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றவாளி குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிப்போருக்கு ரூ. ஒரு லட்சம் பரிசாக அளிக்கப்படும் என்றார் அவர்.

    ஏடிம் மையத்தில் மேலாளர் ஜோதியைத் தாக்கி பணம், செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர் அந்த செல்போனை ஆந்திர மாநிலம், ஹிந்துப்பூரைச் சேர்ந்த அப்சரிடம் ரூ.500-க்கு விற்று விட்டதாகவும், அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதை மாநகரக் காவல் இணை ஆணையர் பி.கே.சிங் மறுத்தார்.

    வங்கி மேலாளர் உடல்நிலையில் முன்னேற்றம்: பெங்களூரு பிஜிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் வங்கி மேலாளர் ஜோதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் என்.கே.வெங்கடரமணா தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

    ஜோதியின் தலையில் இருந்த சிறிய எலும்பு உடைந்து மூளைக்குள் சிக்கியுள்ளது. இதனால், அவரது உடலில் வலதுபுறம் செயலிழந்துள்ளது. தற்போது, அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால், அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளார். ஆனாலும், அவர் முழு உடல்நலம் பெற 3 மாதங்கள் வரை ஆகலாம் என்றார் மருத்துவர் வெங்கடரமணா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai