சுடச்சுட

  

  வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தங்கநகை, ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

  பெங்களூரு பன்னர்கட்டா நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சின்னதுரை (50). இவர் புதன்கிழமை காலை 6 மணியளவில் வீட்டைப் பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டு, இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தப்போது, வீட்டின் கதவிலிருந்த பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த யாரோ ரூ. 2.1 லட்சம் மதிப்புள்ள 45 கிராம் தங்கநகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்ததாம். இது குறித்து ஹுலிமாவு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai