சுடச்சுட

  

  பெங்களூரு பல்கலைக்கழகத்தைசேர்ந்த மாணவிகளுக்கு பன்னாட்டு அறிவியல் விருது கிடைத்துள்ளது.

  இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜெர்மன் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தின் சார்பில் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடந்த அறிவியல் ஆராய்ச்சி போட்டியில் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் உயிரிஅறிவியல்துறையில் ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி.படித்துவரும் மாணவிகள் எஸ்.சி.ஜோதி முதலிடமும், எம்.மைத்ரி 2-ஆம் இடமும் பெற்றனர். இந்திய மாணவர்களிடையே அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்க நடத்தப்படும் இப்போட்டியில் நாடுமுழுவதும் இருந்து 111 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் பெங்களூரு பல்கலைக்கழக மாணவிகள் விருதுபெற்றுள்ளது பெருமை அளிக்கிறது. ஜோதி, மைத்ரி இருவரும் ஜெர்மனியில் 3 மாதங்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபட வாய்ப்பு அளிக்கப்படும். இருமாணவிகளையும் பெங்களூரு பல்கலைக்கழகம்பாராட்டுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai