Enable Javscript for better performance
பெண் மீது தாக்குதல்: குற்றவாளியை அடையாளம் காட்டினால் ரூ.1 லட்சம் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    பெண் மீது தாக்குதல்: குற்றவாளியை அடையாளம் காட்டினால் ரூ.1 லட்சம் பரிசு

    By பெங்களூரு  |   Published on : 22nd November 2013 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏடிஎம் மையத்தில் பெண் மீது தாக்குதல் நடத்திய நபரை அடையாளம் காட்டினால் ரூ. 1 லட்சம் பரிசு வழங்குவதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து வியாழக்கிழமை மாநகர காவல்துறை இணை ஆணையர் பி.கே.சிங் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூருவில் நவ. 19-ம் தேதி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற பெண் மீது மர்மநபர் அரிவாளால் தாக்கிவிட்டு, செல்போன், ரூ. 2500 ரொக்கப்பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். அவர் பெண்ணை அரிவாளால் தாக்குவது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது தொலைக்காட்சிகளில் நாடு முழுவதும் ஒளிபரப்பானதால் பெரும் பரபரப்பும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 8 தனிப்படை போலீஸார் மர்மநபரை தேடி வரும் நிலையில், அவர் குறித்து தகவலை தரும் பொதுமக்களுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என்றார் அவர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai