சுடச்சுட

  

  மகப்பெறு மருத்துவத்தில் முன்னேற்றம் தேவை: அமைச்சர் யு.டி.காதர்

  By பெங்களூரு  |   Published on : 22nd November 2013 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய அளவில் மகப்பேறு மருத்துவத்தில் முன்னேற்ற தேவை என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் தெரிவித்தார்.

  பெங்களூரு இந்திராநகரில் வியாழக்கிழமை மதர்ஹுட் மருத்துவமனையை தொடக்கி வைத்து அவர் பேசியது: மருத்துவத்தில் நாடு முன்னேறாத காலத்தில் பிரசவத்தின் போது தாய், சேய் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. தற்போது மகப்பேறு மருத்துவத்தில் நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. இதனால் பிரசவத்தின் போது தாய், சேய் இறப்பது குறைந்துள்ளது. என்றாலும் கிராமங்களில் ஒரு சில இடங்களில் மகப்பேறுகளின் போது ஒரு சிலர் இறக்கின்றனர். இதனை முற்றிலுமாக தடுக்க மருத்துவத்தில் முன்னேற்றம் தேவை. இதனை மருத்துவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மதர்ஹுட் மருத்துமனையின் தலைவர் முகம்மது ரஹமான் சையத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai