Enable Javscript for better performance
மணல் கொள்ளையை தடுக்க கண்காணிப்புக்குழு அமைக்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    மணல் கொள்ளையை தடுக்க கண்காணிப்புக்குழு அமைக்க முடிவு

    By பெங்களூரு  |   Published on : 22nd November 2013 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணல் கொள்ளையை தடுப்பதற்காக மாவட்டம், வட்ட அளவில் கண்காணிப்புக்குழுக்கள் அமைக்க கர்நாடக அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

    பெங்களூரு, விதானசெüதாவில் வியாழக்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா கூறியது: மணல் கொள்ளையை தடுப்பதற்காக முதல்வர்சித்தராமையா தலைமையில் மாவட்ட, வட்ட அளவில் மணல் கண்காணிப்புக்குழுக்கள் அமைக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கனிமவள விதிகளில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளில் திருத்தம் செய்யப்படுவதால், சட்டவிரோதமாக மணல் கொள்ளை அடிப்பது கட்டுப்பட்த்தப்படும். இதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பொதுப்பணி, சுரங்கம்மற்றும் நில அமைப்பியல், வருவாய்த்துறைகள் கூட்டாக செயல்படுத்தப்படும். முன்பு, மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க எந்ததுறைக்கும் அதிகாரம் இருந்ததில்லை. தற்போது மணல்கொள்கை சட்டப்படி குற்றமாக கருதப்படும். மணல் கொள்கையின் அடிப்படையில் கனிமவள விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    மணல்களுக்கு விலை நிர்ணயிக்கும் பணியை மாவட்ட அளவிலான குழு செய்யும். கல்குவாரி சட்டம்,2011-க்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கற்கள் கிடைக்காததால் பல வளர்ச்சிப்பணிகள் தடைப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்குதீர்வுகாண புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai