Enable Javscript for better performance
மருத்துவ,பொறியியல்மாணவர்களுக்கு 60 விடுதிகள் திறக்கமுடிவு- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவ,பொறியியல்மாணவர்களுக்கு 60 விடுதிகள் திறக்கமுடிவு

    By பெங்களூரு  |   Published on : 22nd November 2013 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவம்மற்றும் பொறியியல் மாணவர்களுக்காக 60 விடுதிகள் தொடங்க மாநில அரசுமுடிவு செய்துள்ளது.

    இது குறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை சமூகநலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா, செய்தியாளர்களிடம் கூறியது: மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்காக தனித்தனியே 60 விடுதிகள் திறக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு விடுதியில் 100 மாணவர்கள் தங்கும் வசதி செய்துதரப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒருமாணவர், மாணவி விடுதிகள் தொடங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே விடுதிகளில் இடம் அளிக்கப்படும். மாணவர்களுக்கு படிக்க நல்லசூழல் அமைய வேண்டுமென்பதற்காக இந்தமுடிவை முதல்வர்சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை எடுத்துள்ளது. இந்தவிடுதிகளில் 25 சத இடங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். எனினும், பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் விடுதியில் இடம் அளிக்கப்படும். மாணவர் விடுதிகளில் நூலகம், கணினி, ஓவியமேஜைஉள்ளிட்ட வசதிகள்செய்துதரப்படும். இந்தவிடுதிகளில்தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு உணவுப்படியாக மாதம் தலா ரூ.1000 அளிக்கப்படும் என்றார் அவர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai