சுடச்சுட

  

  மருத்துவம், பொறியியல்  மாணவர்களுக்கு 60 விடுதிகள்

  By பெங்களூரு,  |   Published on : 22nd November 2013 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 60 விடுதிகள் தொடங்க அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை மாநில சமூக நலத் துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா செய்தியாளர்களிடம் கூறியது:

  மருத்துவம், பொறியியல் மாணவ, மாணவிகளுக்காக தனித்தனியே 60 விடுதிகள் திறக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு விடுதியில் 100 மாணவர்கள் தங்கும் வசதி செய்து தரப்படும்.

  அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாணவர், மாணவி விடுதிகள் தொடங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே விடுதிகளில் இடம் அளிக்கப்படும்.

  மாணவர்களுக்கு படிக்க நல்ல சூழல் அமைய வேண்டும் என்பதற்காக இந்த முடிவை முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை எடுத்துள்ளது. இந்த விடுதிகளில் 25 சத இடங்கள் தலித், பழங்குடியின சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

  எனினும், பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள அனைத்து சமுதாய மாணவ, மாணவிகளுக்கும் விடுதியில் இடம் அளிக்கப்படும். விடுதிகளில் நூலகம், கணினி, ஓவிய மேஜை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்.

  இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உணவுப்படியாக மாதம் தோறும் தலா ரூ.1,000 அளிக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai