சுடச்சுட

  

  பெங்களூருவில் இலவச மூட்டுவலி பரிசோதனை முகாம் சனிக்கிழமை (நவ.23) நடைபெறுகிறது.

  இதுகுறித்து ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:

  எங்கள் மருத்துவமனை சார்பில், பெங்களூரு நாகரபாவி மெயின்சாலை மாருதிநகர் முதலாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை(நவ.23) முதுகுத் தண்டுவடம், மூட்டு, முதுகெலும்பு, நரம்பியல் மற்றும் உடல்பருமன் ஆகியவை தொடர்பான பிரச்னைகள் குறித்து இலவச பரிசோதனை செய்யப்படுகிறது.

  இந்த முகாம் அன்று காலை 10 முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. இதில் மருத்துவ ஆலோசனைகள், சோதனைகள் இலவசமாக வழங்கப்படும்.

  மேலும் விவரங்களுக்கு 9353077772, 8105136482 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai