சுடச்சுட

  

  ஏடிஎம் மையங்களின் கட்டமைப்பை பலப்படுத்த வலியுறுத்தல்

  By பெங்களூரு  |   Published on : 23rd November 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் உள்ள ஏடிஎம் மையங்களின் கட்டமைப்பை பலப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

  பெங்களூருவில் ஏடிஎம் மையத்தில் வங்கி பெண் மேலாளர் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துமாறும் முதல்வர் சித்தராமையாவுக்கு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான சுரேஷ்குமார் எழுதியுள்ள கடித விவரம்:

  ஏடிஎம் மையங்களின் கதவுகளைத் திறக்க அடையாள அட்டை அடிப்படையிலான தானியங்கி முறையை அறிமுகம் செய்ய வேண்டும். மையத்தில் ஒரு நபர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்.

  ஏடிஎம் மையத்தில் ஒன்றுக்கும் மேல் பணம் வழங்கும் கருவி இருக்கக் கூடாது. ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதை வெளியில் இருந்து காணும் வகையில் கண்ணாடிகள் அமைக்க வேண்டும். ஏடிஎம் மையங்களில் எச்சரிக்கை மணி அமைக்க வேண்டும்.

  பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படும் இடத்தில் ஏடிஎம் மையம் அமைக்க அனுமதிக்கக் கூடாது. சிசிடிவி கேமராவை பெயரளவுக்கு வைக்காமல் அதில் பதிவாகும் காட்சிகளை காவல் துறை மற்றும் வங்கி அதிகாரிகள் வாரத்திற்கு ஒருமுறையாவது ஆய்வு செய்ய வேண்டும்.

  ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இளமையான, உடல் பலம் கொண்ட நபர்களை காவலர்களாக நியமிக்க வேண்டும். ஏடிஎம் மையங்களில் உள்கட்டமைப்புகளை பலப்படுத்த வங்கி உயரதிகாரிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.

  பாதுகாப்பு வசதிக்குறைவான ஏடிஎம் மையங்களை மூட உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai