சுடச்சுட

    

    கர்நாடகத்தின் எழுத்தறிவு விகிதம் நூறு சதமாக உயர்த்தப்படும்

    By பெங்களூரு  |   Published on : 23rd November 2013 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தின் எழுத்தறிவு விகிதத்தை 100 சதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

    பெங்களூருவில் மாநகராட்சி கல்வித் துறை சார்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற குருவந்தனம் நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கி அவர் பேசியது:

    பெங்களூரு மாநகராட்சி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களைவிட கூடுதலான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது பெருமை அளிக்கும் செய்தியாகும். இதேபோல, மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் விருது அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    சுதந்திரத்திற்கு முன்னர், நமது மாநிலத்தில் எழுத்து அறிவு விகிதம் 12 சதமாக இருந்தது. தற்போது, அது 76.35 சதமாக உயர்ந்துள்ள போதும், 100 சதமாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த இலக்கை படிப்படியாக அடைய அனைவரும் பாடுபட வேண்டும். இதற்கு  தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். பெண்களுக்கு கல்வியின் முக்கியதுவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அவர்கள் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு நாளுக்கும் இரண்டு ரூபாய்  ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது என்றார் அவர்.

    நிகழ்ச்சியில் மேயர் சத்தியநாராயணா, சட்ட மேலவை உறுப்பினர் புட்டண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai