சுடச்சுட

    

    கர்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது

    By பெங்களூரு,  |   Published on : 23rd November 2013 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக, அந்த மாநில முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஆர்.அசோக் தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

    இந்தப் பணி வருகிற 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லை. 18 வயது நிரம்பிய இளைஞர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதிக்க வேண்டும்.

    எனவே, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரைச் சேர்க்க மேலும் ஒரு மாதத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளோம்.

    ஏடிஎம் மையத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சம்பவம் நடைபெற்று 3 நாள்கள் ஆகியும் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். சட்டம்- ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளைகள் மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

    மதக் கலவரங்களும் அதிகரித்துள்ளன. இதன்மூலம், கர்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது தெரிகிறது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai