சுடச்சுட

  

  குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தர்னா

  By பெங்களூரு,  |   Published on : 23rd November 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி, பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் கர்நாடக மாநில சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

  இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எச்.கே.ராமசந்திரப்பா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதிய உணவுத் திட்டத்தை அரசு அமல்படுத்தியது. இதன்மூலம், 65 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். பெண் ஊழியர்களுக்கு ஆரம்பத்தில் ரூ. 300 முதல் ரூ. 650 வரை ஊதியம் வழங்கப்பட்டது. கடந்த 2009 முதல் ரூ. 1,100- ஆக ஊதியம் உயர்த்தப்பட்டது. இதன்மூலம், சத்துணவு ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 35 ஊதியம் கிடைக்கிறது. மத்திய அரசின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 180 வழங்கப்படுகிறது.

  தமிழ்நாட்டில் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 5,200 வழங்கப்படுகிறது.  இதேபோல, கர்நாடகத்திலும் சத்துணவு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், ஓய்வு ஊதியம், வருங்கால வைப்புநிதி, மாநில தொழிலாளர் காப்பீட்டு வசதி உள்ளிட்டவைகளை அரசு செய்து தர வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai