Enable Javscript for better performance
சர்வதேச அளவில் கன்னடத்தை பரப்ப மாணவர்கள் முன்வர வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச அளவில் கன்னடத்தை பரப்ப மாணவர்கள் முன்வர வேண்டும்

    By பெங்களூரு  |   Published on : 23rd November 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச அளவில் கன்னட மொழியைப் பரப்ப மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும் என்று, கர்நாடக கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர்  உமாஸ்ரீ தெரிவித்தார்.

    பெங்களூரு எம்.எஸ்.ராமையா நிகர்நிலைப் பல்கலைக்கழத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கர்நாடக உதய தின விழாவில், கன்னட மொழி பாடல்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட்டு அவர் பேசியது:

    சர்வதேச அளவில் பேசப்படும் மொழிகளில் இனிமையான மொழி கன்னடம். திராவிட மொழிகளில் ஒன்றான கன்னடத்தை, கர்நாடகத்தில் மட்டுமே பேசுவதால் மற்ற மாநிலங்கள், நாடுகளில் அதிகம் பரவவில்லை.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவ, மாணவிகள் வெளிநாடுகள், பக்கத்து மாநிலங்களுக்கு கல்வி கற்க சென்றாலும், அங்கு தங்களது தாய்மொழியிலே பேசுகின்றனர்.

    இதேபோல, கன்னட மொழி மாணவர்கள் எங்கு சென்றாலும் பேச வேண்டும். இதன்மூலம், கன்னட மொழி வெளிநாடுகள், பக்கத்து மாநிலங்களுக்கு பரவும். இதை மாணவ, மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

    மனிதர்களாக மண்ணில் பிறந்தவர்களுக்கு தாய்மொழி என்பது தனி அடையாளம் என்றார் அவர்.

    விழாவில் அரசு தொலைக்காட்சி கூடுதல் இயக்குநர் மகேஷ் ஜோஷி, எம்.எஸ்.ராமையா தொழில் நுட்பக்கல்லூரி முதல்வர் குல்கர்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai