சுடச்சுட

    

    பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்படும்

    By பெங்களூரு,  |   Published on : 23rd November 2013 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர்களின் வருகையை ஒழுங்குபடுத்த, கர்நாடகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.

    பெங்களூருவில் மனித உரிமை ஆணையம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    பள்ளிகளில் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு வருவதில்லை என்ற புகார்கள் வந்ததையடுத்து, பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கல்வித் துறையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் உதவியுடம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai