சுடச்சுட

    

    பெங்களூருவில் டிசம்பர் 7 முதல் உயர் கல்வி முகாம்

    By பெங்களூரு  |   Published on : 23rd November 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்களுக்கு உயர் கல்வி முகாம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை கே2 லெர்னிங் கல்வி அமைப்பின் நிறுவனர் ஸ்ரீபால் ஜெயின் கூறியது:

    பெங்களூரு நிமான்ஸ் மாநாட்டு அரங்கில் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்களுக்கு  உயர் கல்வி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், பியுசி தேர்வு பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு மாதிரிகள், பயிற்சிகள் ஆகியவை நடத்தப்படும்.

    இந்த முகாமில் அதிக அளவு மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முகாம் நடைபெறும் இரண்டு நாள்களுக்கு பெங்களூரு மாநகரின் முக்கிய பகுதியிலிருந்து முகாம் நடைபெறும் நிமான்ஸ் மாநாட்டு அரங்கு வரை இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை எங்கள் அமைப்புடன் இணைத்து மாநில பியுசி கல்வித் துறையும் செய்து வருகிறது.

    மேலும் விவரங்களுக்கு 080-41630500 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai