Enable Javscript for better performance
மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்குகிறார் சித்தராமையா- Dinamani

சுடச்சுட

    

    மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்குகிறார் சித்தராமையா

    By பெங்களூரு,  |   Published on : 23rd November 2013 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் மதங்களுக்கிடையே மோதலை உருவாக்க சித்தராமையா முயற்சிப்பதாக அந்த மாநில முன்னாள் முதல்வர்

    ஜெகதீஷ் ஷெட்டர் குற்றஞ்சாட்டினார்.

    இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    வளர்ச்சித் திட்டங்கள் உள்பட அனைத்து அரசு நடவடிக்கைகளிலும் முதல்வர் சித்தராமையா முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார். புதிதாக அமல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆராயாமல், அறிவிப்பை வெளியிடுகிறார்.

    திருமண நிதியுதவித்  திட்டம், மாணவர்களுக்கான சுற்றுலாத் திட்டம், மூடநம்பிக்கை தடைச் சட்ட மசோதா ஆகியவற்றில் அரசின் தடுமாற்றத்தை உணர முடிகிறது. மூடநம்பிக்கை தடைச் சட்ட மசோதா, இந்து மதத்தின் சடங்குகள், சம்பிரதாயங்களுக்கு எதிரானது.

    இந்தச் சட்ட மசோதாவை பெல்காம் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய அனுமதிக்கமாட்டோம். ஜாதி, மதத்தின் அடிப்படையில் திட்டங்களை வகுக்கும் சித்தராமையா, தீவிர மதவாதியாக இருக்கிறார் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜாதி, மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்க சித்தராமையா முயற்சிக்கிறார். சுரங்க முறைகேடு விவகாரத்தில் மாநில செய்தித் துறை அமைச்சர் சந்தோஷ்லாட்டை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு அரசியல் ரீதியாக பல போராட்டங்கள் நடத்திய போதும், சித்தராமையா அலட்சியம் காட்டி வருகிறார்.

    சந்தோஷ்லாட்டை பதவிநீக்கம் செய்யாவிட்டால், பெல்காம் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பெரும் போராட்டம் நடத்துவோம். கரும்புக்கு ஆதரவு விலை நிர்ணயிப்பதிலும் அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை.

    அன்னபாக்கியா திட்டம், பால் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முறையாக செயல்படுத்தப்படவில்லை. பெங்களூருவில் சாலைகளைச் சீரமைக்கவும் சித்தராமையா நிதி ஒதுக்கவில்லை.

    மாநிலத்தில் அனைத்து முனைகளிலும் சித்தராமையா அரசு தோல்வி அடைந்துள்ளது. இதுகுறித்து வருகிற 25-ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பிரச்னை எழுப்புவோம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai