சுடச்சுட

    

    முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி ஜவுளி விற்பனை: ஒருவர் கைது

    By பெங்களூரு  |   Published on : 23rd November 2013 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி  ஜவுளி விற்பனை செய்ததாக யஸ்வந்தபுரம் மாரப்பனபாளையத்தைச் சேர்ந்த சுரேந்திரகுமார் (27) கைது செய்யப்பட்டார்.

    பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் ஜவுளி விற்பனை செய்த போது, அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகளை மகாலட்சுமி லேஅவுட் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    பலாத்காரம் செய்து பெண் கொலை

    கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் பெங்களூருவில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

    கொல்கத்தாவைச் சேர்ந்த ரத்தன் பெங்களூரு சதரமங்களாவில் உள்ள தனியார் நிறுவனத்தில்  பாதுகாவலராக பணியாற்றி வந்தாராம். வியாழக்கிழமை ரத்தனின் நண்பர் உத்தம்போஸ் பெங்களூருவிற்கு வந்து, அவரது வீட்டில் தங்கினாராம்.

    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ரத்தன் பணிக்குச் சென்ற போது, வீட்டில் இருந்த அவரது மனைவி ரூபாவை (35) உத்தம்போஸ் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காடுகோடி போலீஸார் தப்பியோடிய உத்தம்போûஸ தேடி வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai