சுடச்சுட

  

  மூடநம்பிக்கை தடைச் சட்ட மசோதா குறித்து விவாதிப்பது வருத்தமளிக்கிறது

  By பெங்களூரு  |   Published on : 23rd November 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் மூடநம்பிக்கை தடைச் சட்ட மசோதாவை அமல்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பினரும் விவாதிப்பது வருத்தமளிக்கிறது என்று, அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.

  பெங்களூருவில் மனித உரிமை ஆணையம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் ஜெயசந்திரா கூறியது:

  கடவுள், மதம் ஆகியவற்றின் பெயரில் பல்வேறு இடங்களில் மூட நம்பிக்கைகளால் அப்பாவி பொதுமக்கள் ஏமாற்றுப்படுகின்றனர். இதனால், அதிக அளவில் குழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.

  இதைத் தடுக்கும் முயற்சியாக மூடநம்பிக்கை தடைச் சட்ட  மசோதாவைக் கொண்டு வர அரசு முடிவு செய்தது. இது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது வருத்தம் அளிக்கிறது.

  மூடநம்பிக்கை தடைச் சட்ட மசோதாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் மாநில அளவில் விவாதம் நடந்து வருகிறது. 

  எனவே, அந்த சட்ட மசோதாவை அமல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. என்றாலும், விவாதத்தின் மூலம் மூடநம்பிக்கைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். இன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் பெரும்பாலானவர்கள் மூடநம்பிக்கை தடைச் சட்ட மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்ற கேட்டு கொண்டனர்.

  மாணவர்களே மூடநம்பிக்கை குறித்து தெளிவாக இருக்கும் போது, அவரது பெற்றோர்களும், மற்றவர்களும் அதுகுறித்து சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.

  நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் கிம்னே ரத்னாகர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நரேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai