சுடச்சுட

  

  குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் பிரதமராகும் பகல் கனவு ஒரு போதும் நனவாகாது என்று, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்தார்.

  பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  கடந்த 2003-ஆம் ஆண்டு, தில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லி தவிர இதர மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

  ஆனால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இதேபோன்று வருகிற மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். எனவே, நரேந்திர மோடியின் பிரதமராகும் பகல் கனவு ஒருபோதும் நனவாகாது.

  இந்தியாவில் குஜராத் மாநிலம் வளர்ச்சி பெற்று விட்டதாக நரேந்திர மோடி பொய் பிரசாரம் செய்து வருகிறார். பொய்யை திரும்பத் திரும்ப கூறினால் உண்மையாகிவிடும் என்று மோடி நினைக்கிறார்.

  குஜராத்தில் பெருநிறுவனங்கள் வளர்ந்து விட்டால், அந்த மாநில மக்கள் வளமாகிவிட்டதாகவோ, வளர்ந்து விட்டதாகவோ கருத முடியாது. 12-ஆம் நூற்றாண்டு முதல் குஜராத் மக்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.

  அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பும் உள்ளது. நரேந்திர மோடி முதல்வரான பிறகு, அந்த மாநிலத்தில் பெருநிறுவனங்களே வளர்ந்தன.

  குஜராத்தைக் காட்டிலும், கர்நாடகம் பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

  கர்நாடக பாஜகவினர் மோடியின் முகமூடி அணிந்து தேர்தலைச் சந்திக்க முற்படுகிறார்கள். இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

  மோடிக்கு உண்மை பேச வராது என்பதை அவரது பேச்சு நிரூபிக்கிறது. மோடியால் காங்கிரஸ் பீதியடையவில்லை. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட காங்கிரஸýக்கு மோடியும், பாஜகவும் சவால் அல்ல என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai