சுடச்சுட

    

    பெங்களூருவில் நடைபெற்று வரும் கணிதக் கண்காட்சி வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பன்னாட்டு அறிவியல் கோட்பாடுசார் மையம் சார்பில், பெங்களூரு விஸ்வேஷ்வரையா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் கடந்த 22-ஆம் தேதி முதல் கணிதக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்தக் கண்காட்சியை பிரபல விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா தொடக்கிவைத்தார். இந்தக்  கண்காட்சியை வருகிற 24-ஆம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையடுத்து, கண்காட்சி வருகிற டிசம்பர் 1-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கண்காட்சி தினமும் காலை 10 முதல் 6 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டிருக்கும். கிரகங்களின் செயல்பாடுகள் குறித்த சிறப்புக் காட்சி அரங்கும் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.  கண்காட்சியை முன்னிட்டு, சிறப்பு கலந்தாய்வுகள் நடத்தப்படுகின்றன. 30 நாடுகளின் 100 அமைப்புகள் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன. மேலும் விவரங்களுக்கு 080-22864114, 23608200 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai