சுடச்சுட

    

    கர்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) மழை பெய்ய  வாய்ப்பிருப்பதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    ஹெலன் புயல் காரணமாக பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தின் சில பகுதிகளில் சனிக்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. தென் கர்நாடகத்தின் உள்பகுதியில் பரவலாக மழை பதிவாகின.

    ராமநகரம் மாவட்டம், கனகபுராவில் அதிகபட்சமாக 10 மி.மீ. மழை பதிவாகியது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் கர்நாடகம், வட கர்நாடகம் மற்றும் கடலோர கர்நாடகத்தில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    பெங்களூருவில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    பெங்களூருவில் திடீர் மழை:

    பெங்களூருவில் சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதலே லேசான தூரல் காணப்பட்டது. பிற்பகல் 3 மணி அளவில் லேசான மழை பெய்தது. இரவு 7.30 மணியளவில் பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பதிவாகின.

    இதனால், மாநகரில் உள்ள சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பெங்களூருவின் தட்பவெப்பம் அதிகபட்சம் 30 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியசாகவும் இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai