சுடச்சுட

  

  சந்தோஷ்லாட் ராஜிநாமாவால் காங்கிரஸின் பலம் கூடியுள்ளது

  By பெங்களூரு,  |   Published on : 24th November 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக செய்தித் துறை அமைச்சர் சந்தோஷ்லாட் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம், காங்கிரஸ் கட்சியின் தார்மீகபலம் கூடியுள்ளது என்று, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

  இதுகுறித்து பெங்களூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு நானோ, முதல்வர் சித்தராமையாவோ, கட்சி மேலிடமோ சந்தோஷ்லாட்டை நிர்பந்திக்கவில்லை. கட்சிக்கும், ஆட்சிக்கும் தர்மசங்கடம் ஏற்படக் கூடாது என்பதால், தாமாகவே முன்வந்து தனது அமைச்சர் பதவியை சந்தோஷ்லாட் ராஜிநாமா செய்தார். இதை வரவேற்கிறேன்.

  சந்தோஷ்லாட் தவறு செய்யவில்லை என்று முதல்வர் சித்தராமையாவும், நானும் ஆரம்பம் முதலே நியாயப்படுத்தி வந்திருக்கிறோம். பொது வாழ்க்கையில் புகார் எழுந்ததும் தார்மீக அடிப்படையில் பதவி துறப்பது வாடிக்கையானது. அதன்படி சந்தோஷ்லாட் செயல்பட்டுள்ளார்.  சந்தோஷ்லாட் விவகாரத்தை வைத்துக் கொண்டு சட்டப்பேரவையில் பாஜக பிரச்னை எழுப்பும் என்பதால், காங்கிரஸ் பயப்படவில்லை. ஒருவேளை பிரச்னை எழுப்பியிருந்தாலும் அதனால் பாஜகவுக்குத்தான் தொந்தரவு ஏற்பட்டிருக்கும்.

  லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அளித்த சுரங்க முறைகேடுகள் தொடர்பான அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தால், பாஜகவினருக்கு தொந்தரவு ஆகுமே தவிர, காங்கிரஸýக்கு அல்ல.

  அமைச்சரவையில் தற்போது 5 இடங்கள் காலியாக உள்ளன. அமைச்சரவையை விரிவாக்குவது குறித்து முதல்வர் சித்தராமையா தக்க நேரத்தில் முடிவெடுத்து செயல்படுத்துவார்.

  எனக்கு துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பது கட்சியினரின் ஆசை. எனினும், இதில் நான் கவனம் செலுத்தவில்லை. மாறாக, மக்களவைத்  தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றியைத் தேடி தருவதில் கவனம் செலுத்தி வருகிறேன் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai