சுடச்சுட

    

    பெங்களூருவில் குப்பை அகற்றும் பணி திருப்திகரமாக இல்லை

    By பெங்களூரு,  |   Published on : 24th November 2013 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் குப்பை அகற்றும் பணி திருப்திகரமாக நடைபெறவில்லை என்று, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி குற்றஞ்சாட்டினார்.

    பெங்களூரு டவுன் ஹாலில் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

    பெங்களூருவில் குப்பை பிரச்னை பூதாகரமாக உள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, குப்பைகள் அகற்றப்பட்டாலும், அது திருப்திகரமாக நடைபெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

    பெங்களூரு மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள், பொறியாளர்கள் தினமும் நகரில் சுற்றித்திரிந்தாலும், இந்த பிரச்னைகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை. தெருவிளக்கு பிரச்னை, சாலை பழுதடைந்துள்ள பிரச்னை, இப்படி எந்த பிரச்னைகளும் அதிகாரிகளின் கவனத்திற்கு வருவதேயில்லை.

    பொதுமக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் அதிகாரிகள் அக்கறை செலுத்துவதில்லை. குப்பை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளேன். இனிமேலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai