Enable Javscript for better performance
வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் கன்னடத்தில் எழுத வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் கன்னடத்தில் எழுத வேண்டும்

    By பெங்களூரு,  |   Published on : 24th November 2013 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் கன்னடத்தில் எழுத வேண்டும் என்று, அந்த மாநில உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கேட்டுக் கொண்டார்.

    கன்னட மொழி அமலாக்க பேரவை சார்பில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கன்னட மொழி பெயர்ப் பலகை வார விழாவைத் தொடக்கிவைத்து பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    பெங்களூருவில் எங்கு பார்த்தாலும் ஆங்கில பெயர்ப் பலகைகள்தான் கண்ணில் படுகின்றன. கன்னட மொழியின் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இனிமேலாவது, வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் கன்னட மொழியில் அமைக்க வேண்டும் என்று வியாபாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

    கன்னட மொழியைப் பயன்படுத்தினால் மட்டுமே அந்த மொழி மேம்படும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் கன்னடர்கள் அதிகம் வசிப்பதால், கன்னடத்தில் பெயர்ப் பலகைகள் அமைவதுதான் சரியானது.

    கன்னட மொழியைக் கட்டாயப்படுத்தி வளர்க்க வேண்டியதில்லை. மாறாக, கன்னடத்தில் பெயர்ப் பலகை வைக்குமாறு வணிக நிறுவனங்களைக் கேட்டுக் கொள்ளலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai