சுடச்சுட

  

  விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும்

  By பெங்களூரு  |   Published on : 24th November 2013 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாரத ரத்னா விருதுக்கு தேர்வாகியுள்ள விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று, பெங்களூரு மாநகராட்சி மேயர் சத்தியநாராயணா தெரிவித்தார்.

  பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள இல்லத்தில் சனிக்கிழமை விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பிறகு, செய்தியாளர்களிடம் சத்தியநாராயணா கூறியது:

  நமது நாடு பெருமைப்படும் விஞ்ஞானியான சி.என்.ஆர்.ராவ், பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிவியல் அறிஞர்களுக்கு மட்டுமல்ல, கன்னடர்கள் அனைவருக்கும் பெருமையளிக்கிறது.

  சி.என்.ஆர்.ராவை பாராட்டுவது நமது கடமையாகும். எனவே, பெங்களூரு மாநகராட்சி சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்.

  பெங்களூரு மாநகர வளர்ச்சிக்குத் தேவையான பல ஆலோசனைகளை ராவ் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். அவரது ஆலோசனைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்றார் அவர்.

  சி.என்.ஆர்.ராவ் கூறியது:

  பூங்கா நகரம் என்ற பெயர் பெங்களூருவுக்கு உண்டு. ஆனால், குப்பை பிரச்னை பெங்களூருவில் பூதாகரமாகியுள்ளது. பூங்கா நகரம் என்ற பெயரைப் பாதுகாக்க பெங்களூரு மாநகராட்சி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  இது எனது நகரம் என்று நினைத்து பணியாற்றினால், பெங்களூரு சிறந்த நகரமாக பரிணமிக்கும்.

  பிரிட்டன், சீனா, கொரியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றால் பெங்களூரு நகரை உயர்வாக பேசுகிறார்கள். அந்த பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  அப்போது மாநகராட்சி துணைமேயர் இந்திரா, ஆளுங்கட்சித் தலைவர் அஸ்வத்நாராயண கெüடா, மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சுநாத் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai