Enable Javscript for better performance
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி நடைபயணம்- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி நடைபயணம்

    By பெங்களூரு,  |   Published on : 25th November 2013 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி, பெங்களூருவில் ஜனதா கூட்டுறவு வங்கி சார்பில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

    அந்த வங்கியின் பொன் விழாவையொட்டி, கூட்டுறவு வங்கிச் சேவை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி, வங்கியின் தலைவர் மரி கெüடா தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடைபயணம் பெங்களூரு ராஜாஜிநகர் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

    மல்லேஸ்வரம் 18-ஆவது முக்கியச் சாலை வழியாக மீண்டும் விவேகானந்தா கல்லூரி மைதானம் வரை 4 கி.மீ. தொலைவுக்கு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மரி கெüடா செய்தியாளர்களிடம் கூறியது:

    கர்நாடகத்தில் 266 கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவற்றில் ஜனதா கூட்டுறவு வங்கி உள்பட 6 வங்கிகள் மட்டுமே ரூ. 500 கோடி மூலதனத்தைத் தாண்டியுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் இந்த வங்கியின் பெரும் வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பே முக்கிய காரணம்.

    நடுத்தர மக்களின் உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த வங்கி சிறப்பான சேவையாற்றி வருகிறது. ஜனதா வங்கிக்கு பெங்களூருவில் 4 கிளைகள் உள்ளன. நவம்பர் மாதத்தை கூட்டுறவு சேவை மாதமாக அறிவித்துள்ளதால், மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில், கூட்டுறவு சேவை, சுற்றுச்சூழலை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.  நடைபயணத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீனிவாசய்யா, கர்நாடக வாலிபால் சங்க உறுப்பினரும், தேசிய வாலிபால் போட்டி நடுவருமான பெட்டே கெüடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai