சுடச்சுட

  

  டிசம்பர் 1-இல் மூடநம்பிக்கை ஒழிப்பு கருத்தரங்கம்

  By பெங்களூரு  |   Published on : 25th November 2013 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் மூடநம்பிக்கை ஒழிப்பு கருத்தரங்கம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

  இதுகுறித்து கர்நாடக திராவிடர் கழகம் வெளியிட்ட அறிக்கை:

  கர்நாடக திராவிடர் கழகம் சார்பில், பெங்களூருவில் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி அதன் தலைவர் கி.வீரமணி பிறந்த நாள் விழாவில் மூடநம்பிக்கை ஒழிப்பு கருத்தரங்கம் நடைபெறும்.

  கும்பார்குண்டி லேஅவுட், பெரியார் நூலக அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கருத்தரங்கில் மு.ஜானகிராமன், கி.சி.இளங்கோவன், முத்துச்செல்வன், கவிஞர் ரத்தினம், கே.ஜெயகிருஷ்ணன், தென்னவன், முல்லைக்கோ ஆகியோர் பேசுகின்றனர்.

  மேலும் விவரங்களுக்கு 9902732744 என்ற செல்பேசியில்  தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai