சுடச்சுட

  

  பெங்களூருவில் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு ஏற்றுமதி நடைமுறை மற்றும் ஆவணம் தயாரிப்பு பயிலரங்கம் நடைபெறுகிறது.

  இதுகுறித்து பெங்களூருவில் அமைந்துள்ள நுண், சிறு, நடுத்தரத் தொழில் மேம்பாட்டு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  இந்திய அரசின் நுண், சிறு, நடுத்தரத் தொழில் மேம்பாட்டு மையம் சார்பில், பெங்களூரு ராஜாஜிநகர் தொழில்பேட்டையில் அமைந்துள்ள மைய அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதிவரை படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக ஏற்றுமதி நடைமுறை மற்றும் ஆவணம் தயாரிப்பு பயிலரங்கம் நடத்தப்படும்.

  ஏற்றுமதிக்கான பொருள்கள், சந்தை வாய்ப்புகள், வாங்குவோரை அடையாளப்படுத்துதல், ஏற்றுமதி விலை, கடன் கடிதங்கள், சிப்பமிடுதல், தரக் கட்டுப்பாடு, சரக்கு சோதனை, ஏற்றுமதி ஆவணம் தயாரிப்பு, சுங்க வரி, ஏற்றுமதி மானியம், சிக்கல் மேலாண்மை உள்ளிட்ட அம்சங்கள் பயிலரங்கில் விவாதிக்கப்படும்.

  புதிய தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதி நிறுவன பிரதிநிதிகள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்கலாம். இதற்கு முன்பதிவு செய்வது அவசியம். மேலும் விவரங்களுக்கு 080-23151581, 8971828533 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai