சுடச்சுட

  

  பயணச் சீட்டு பெறாதவர்களிடம் ரூ. 14 லட்சம் அபராதம் வசூல்

  By பெங்களூரு  |   Published on : 25th November 2013 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் மாநகரப் பேருந்துகளில் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடமிருந்து அபராதமாக

  ரூ. 14 லட்சம் வசூலிக்கப்பட்டது.

  இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூருவில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் கடந்த அக்டோபர் மாதத்தில்  அதிகாரிகள் சோதனை செய்ததில், 9,764 பயணிகள் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்தது கண்டறியப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ. 14,62,944 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

  கடமையில் அலட்சியம் காட்டியதாக பேருந்து ஓட்டுநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க 5,310 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இந்தச் சோதனையின் போது, மகளிருக்கு ஒதுக்கிய இருக்கைகளில் அமர்ந்திருந்த 1,055 ஆண் பயணிகளிடம் இருந்து ரூ. 1,05,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்தச் சோதனை மாதந்தோறும் நடத்தப்படும்.

  சோதனையின் போது, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பயணிகளைக்  கேட்டுக் கொள்கிறோம். பேருந்தில் பயணம் செய்வதற்கு செல்லத்தக்க பயணச் சீட்டு, பேருந்து அட்டை வைத்திருப்பது அவசியம்.  இதேபோல, மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் ஆண்கள் அமரக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai