சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என்று, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ணப்பா தெரிவித்தார்.

  பெங்களூரு மஜத தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில்  மஜதவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  கர்நாடகத்தில் மஜதவைப் பலப்படுத்த அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். கட்சியில் நிலவும் சில பிரச்னைகளை தீர்ப்பதற்காக நானும், கட்சியின் தேசியத் தலைவர் தேவ கெüடாவும் 16 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம்.

  மாநில நிர்வாகிகள் பட்டியலில் அனைத்து சமுதாயத்தினருக்கும் சமூக நீதி அடிப்படையில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக மாவட்டம், வட்டம், சட்டப்பேரவைத் தொகுதி, வாக்குச்சாவடி அளவிலான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் பணி நடைபெறும். இந்தப் பணிகள் வருகிற டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும்.

  மக்களவை பொதுத் தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் மஜத தனித்துப் போட்டியிடும்.

  வருகிற டிசம்பர் 2-ஆவது வாரத்தில் 28 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கவுள்ளோம்.

  அடுத்தாண்டு ஜனவரி முதல் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். கட்சிக்கு புதிய உற்சாகம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.

  மஜத மாநில நிர்வாகிகள்:

  அரசியல் விவகாரங்கள் குழுத் தலைவராக எச்.கே.குமாரசாமியும், நாடாளுமன்றக் குழுத்  தலைவராக எச்.சி.நீராவரியும், தலைமை பொதுச் செயலாளராக அப்துல் அஜீமும், மூத்த துணைத் தலைவராக எஸ்.சிக்கமாதும், செய்தித் தொடர்பாளர்களாக ரமேஷ்பாபு, எஸ்.சுப்ரமணியம், மரிலிங்கே கெüடா, தன்வீர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  கட்சியின் செயல் தலைவர்களாக 9 பேரும், துணைத் தலைவர்களாக 6 பேரும், பொதுச் செயலாளர்களாக 15 பேரும், செயலாளர்களாக 12 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai