சுடச்சுட

  

  விதிமீறல்: 3,645 தனியார் பேருந்துகள் மீது வழக்கு

  By பெங்களூரு  |   Published on : 25th November 2013 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 3,645 தனியார் பேருந்துகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

  இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பயணிகள் பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ள அகில இந்திய சுற்றுலாப் பேருந்துகள், ஒப்பந்த பேருந்துகள், தனியார் பயணிகள் பேருந்துகள் ஆகியவற்றில் பின்பற்ற வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி முதல் நவம்பர் 21-ஆம் தேதி வரை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

  இதில், பேருந்தின் பதிவு ஆவணங்கள், தொழில்நுட்ப நிலை, பயணிகள் வாகனங்களில் சரக்கு கொண்டு செல்லப்படுகிறதா ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

  மொத்தம் 10, 353 வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், விதிமுறைகளை மீறியதாக 3,645 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

  168 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமுறைகளை மீறியதாக பேருந்துகளின் உரிமையாளர்களிடமிருந்து ரூ. 90,67,464 அபராதம் வசூலிக்கப்பட்டன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai