சுடச்சுட

  

  கே.ஆர்.புரா காவல் சரகத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

  பெங்களூரு ராம்மூர்த்தி நகர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (22). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தனது சகோதரர் சிவசங்கருடன் லட்சுமிலே அவுட் பிரதான சாலையில் சென்ற போது, அங்கிருந்த ஜெஸ்வந்த், மஞ்சு ஆகியோருடன் தகராறு ஏற்பட்டதாம்.

  இதில் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் வெங்கடேஷை தாக்கி, கத்தியால் குத்தினராம். பலத்த காயமடைந்த வெங்கடேஷ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

  இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai