சுடச்சுட

  

  பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைப் பறித்த வழக்குகளில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  தும்கூர் மாவட்டம், கெüரிபிதனூர், ஹலிகேனஹள்ளியைச் சேர்ந்தவர் கோபிநாத் (28). மதுகிரி வட்டத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரா (30). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று, தனியாகச் செல்லும் பெண்களின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலிகளைப் பறித்து வந்தனராம்.

  இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், இருவரையும் கைது செய்து ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள 140 கிராம் எடையுள்ள 5 தங்கச் சங்கிலிகளைப் பறிமுதல் செய்தனர்.

  இதேபோல, பானஸ்வாடி காவல் சரகத்தில் லாவண்யா என்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலிகளைப் பறிக்க முயன்ற வழக்கில் சையத் குயான் (27), சவுனக்தத் (20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

  விசாரணையில் சையத் எம்.பி.ஏ பட்டதாரி என்பதுடன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரிய வந்தது.

  சவுனக்தத் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai