சுடச்சுட

    

    தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு கர்நாடக தி.க. பாராட்டு

    By பெங்களூரு,  |   Published on : 26th November 2013 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கர்நாடக திராவிடர் கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக திராவிடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன் வெளியிட்ட அறிக்கை:

    நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளைச் சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள் மூலம் விரைவாக முடிப்பதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இரு தரப்பினரையும் நேருக்கு நேர் அழைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஒரே நாளில் 30 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்காக, நீதிமன்றங்களையும், தலைமை நீதிபதி சதாசிவத்தையும் கர்நாடக திராவிடர் கழகம் பாராட்டுகிறது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai