சுடச்சுட

    

    மகளிர், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் அரசு தோல்வி

    By பெங்களூரு,  |   Published on : 26th November 2013 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் மகளிர், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் அரசு தோல்வி அடைந்துள்ளது என்று, ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார்.

    பெங்களூருவில் திங்கள்கிழமை சர்வதேசப் பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசியது:

    பெங்களூரு ஏடிஎம் மையத்தில் அண்மையில் வங்கி மேலாளார் ஜோதி உதய் மீது மர்ம நபர் நடத்திய தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இதுதொடர்பாக, மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை. மாநில உள் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.

    அவரின் நடவடிக்கையும் மந்தமாக உள்ளது.

    மாநிலத்தில் நாளுக்கு நாள் மகளிர் மற்றும் சிறுவர்கள் மீதானத் தாக்குதல் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.

    இதைத் தடுப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டிய போலீஸாரை, அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

    போலீஸாரின் பணி நேரம் 12 மணி நேரமாக உள்ளது. இதனால் அவர்களுக்கு மன அழுத்தம், நெருக்கடி அதிகரித்துள்ளது.

    எனவே, போலீஸாரின் பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும்.

    மாநிலத்தில் காலியாக உள்ள காவல் துறை பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றார் ஆளுநர் பரத்வாஜ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai