Enable Javscript for better performance
ரூ.10 லட்சம் மிளகு திருட்டு:8 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சிம்மகளூர் மாவட்டம், கௌதுஹள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 31 மிளகு மூட்டைகளைத் திருடி விற்றதாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    தென் கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த காலீத் (44), நேரியா அஷ்ரப் (35), கோலப்பே அஷ்ரப் (28), சலீம் (28), அப்பாஸ் ரகுமான் (32), அப்துல் ரகுமான் (40), முகம்மது கவுஸ் (30), சையத் மெüசீன் (26) ஆகியோர் சிக்மகளூர் மாவட்டம், மடிகேரி வட்டம், கெüதுஹள்ளியில் கிடங்கில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 1,380 கிலோ எடையுள்ள 31 மிளகு மூட்டைகளைத் திருடிச் சென்று சக்லேஸ்வர், புத்தூர் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்தனராம்.

    இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், பெங்களூருவில் அவர்கள் 8 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    அவர்கள் அளித்த தகவலின் பேரில், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மிளகு மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai