சுடச்சுட

  

  கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பெல்காமில் நடைபெறுவதால், பெங்களூருவில் சட்டப்பேரவை அமைந்திருக்கும் விதானசெளதா ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.

  பெங்களூருவிலுள்ள விதானசெüதா கட்டத்தில் சட்டப்பேரவை, சட்டமேலவை, தலைமைச் செயலகம் இயங்கி வருகின்றன.

  முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் அலுவலகங்களும் இங்கு அமைந்திருப்பதால், எப்போதும் கூட்டம் நிறைந்து வழியும்.

  கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் பெல்காமில் திங்கள்கிழமை தொடங்கியுள்ளதால், முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள், பேரவை, மேலவை செயலக அதிகாரிகள் பெல்காமில் முகாமிட்டுள்ளனர்.

  இதைத் தொடர்ந்து பெங்களூருவில் விதானசெளதா திங்கள்கிழமை ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai