சுடச்சுட

  

  பெங்களூருவில் பாதுகாவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களுக்கு போலீஸார் பூட்டு போட்டனர்.

  பெங்களூருவில் கடந்த 19-ஆம் தேதி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற வங்கி பெண் மேலாளர் ஜோதி உதய் மர்ம நபரால் தாக்கப்பட்டார். இதையடுத்து, ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்; சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். எச்சரிக்கை மணி அமைக்கப்பட வேண்டும். இதன் செயல்படுத்தாத ஏடிஎம் மையங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி மறுக்கப்படும் என்று பெங்களூரு மாநகரக் காவல் துறை ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் தெரிவித்திருந்தார்.

  அவர் விதித்த காலக்கெடு ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் முடிவடைந்ததையடுத்து போலீஸார், பாதுகாவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களுக்கு பூட்டு போடத் தொடங்கினர்.

  திங்கள்கிழமை வரை சுமார் 1037 ஏடிஎம் மையங்களுக்கு போலீஸார் பூட்டு போட்டுள்ளனர்.

  இதுகுறித்து மாநகர சட்டம்- ஒழுங்கு கூடுதல் ஆணையர் கமல்பந்த் செய்தியாளர்களிடம் கூறியது:

  ஏடிஎம் மையத்தில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, பாதுகாவலர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். சிலர் அதற்கு உரிய விளக்கம் தரவில்லை. எனவே பாதுகாவலர், எச்சரிக்கை மணி, சிசிடிவி கேமராக்கள் பொருத்தாத ஏடிஎம் மையங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

  பாதுகாப்பு இல்லாத ஏடிஎம் மையங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai