Enable Javscript for better performance
எனது கோரிக்கையை அரசு ஏற்கும்வரை தர்னா போராட்டம் தொடரும்: முன்னாள் முதல்வர் எடியூரப்பா- Dinamani

சுடச்சுட

    

    எனது கோரிக்கையை அரசு ஏற்கும்வரை தர்னா போராட்டம் தொடரும்: முன்னாள் முதல்வர் எடியூரப்பா

    By பெல்காம்  |   Published on : 27th November 2013 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமண நிதியுதவிதிட்டத்தை அனைத்து சமுதாய ஏழை பெண்களுக்கும் விரிவாக்கம் செய்யும் வரை எனது தர்னா போராட்டம் தொடரும் என்று முன்னாள் முதல்வரும், கஜகதலைவருமான எடியூரப்பா தெரிவித்தார்.

    பெல்காமில் உள்ள கர்நாடக சட்டப்பேரவையில் வளாகத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முஸ்லீம் பெண்களுக்கு அளிக்கப்படும்திருமண நிதியுதவி திட்டத்தை அனைத்து சமுதாய ஏழைபெண்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை தர்னா போராட்டத்தை தொடங்கினார். அவரது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் செவ்வாய்க்கிழமையும் அவர் தனது தர்னா போராட்டத்தை தொடர்ந்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மக்கள் பிரச்னைகளை களைவதில் மாநில அரசு அலட்சியம் காட்டிவருகிறது. எனது போராட்டம் குறித்து முதல்வர் சித்தராமையா ஏதேதோ கூறி மக்களை திசை திருப்பி வருகிறார். யார் என்ன கூறினாலும் எனது கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை திரும்பப்பெறும் எண்ணமில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்னை ஒருவேளை பேரவைத்தலைவர் சட்டபேரவை மண்டபத்திலிருந்து வெளியேற்றலாம். என்னை வெளியேற்றினாலும், சட்டப்பேரவை மண்டபத்திற்கு எதிரே அமர்ந்து தர்னா போராட்டத்தை தொடர்ந்து நடத்துவேன். ரூ. 1.25 ஆயிரம் கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்த அரசு, திருமண உதவி திட்டத்தை அனைத்து சமுதாயத்தினருக்கும் பரவலாக்குவதில் தயங்கம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை என்றார். இதனிடையே சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியவுடன், எடியூரப்பாவின் தர்னா போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவர் காகோடு திம்மப்பா, உயர்க்கல்வி அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், சட்டப்பேரவை மஜத துணைத் தலைவர் ஒய்.எஸ்.வி.தத்தா உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டனர். ஆனாலும் எடியூரப்பா தனது போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai