சுடச்சுட

    

    ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு கருவிகள் பொறுத்த கால அவகாசம் கேட்டு வங்கிகள் கோரிக்கை

    By dn  |   Published on : 27th November 2013 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு கருவிகள் பொறுத்த கால அவகாசம் கேட்டு வங்கிகள் கோரிக்கை வைத்துள்ளன என்று பெங்களூரு மாநகர் காவல்துறை ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: அண்மையில் ஏடிஎம் மையத்தில் பெண் வங்கி மேலாளர் ஜோதி உதய் மர்மநபரால் தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நபரை போலீஸார் தேடி வரும் நிலையில், ஏடிஎம் மையங்களில் 24 மணிநேரமும் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும். எச்சரிக்கை மணி அமைக்கப்பட வேண்டும். இதன் செயல்படுத்தாத ஏடிஎம் மையங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நவ. 24-ம் தேதி இரவு முதல் பாதுகாவலர்கள், பாதுகாப்பு கருவிகளை பொருத்தாத ஏடிஎம் மையங்களுக்கு பூட்டு போடப்பட்டது. இந்த நிலையீல் சம்பந்த வங்கி அதிகாரிகள் என்னுடம் தொடர்பு கொண்டு, பாதுகாவலர்கள், பாதுகாப்பு கருவிகள் பொருத்த கால அவகாசம் கோரியுள்ளனர். இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரவேண்டும் என்பதால் இந்த கால அவகாசத்தை அவர்கள் கோரியுள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர்களுக்கு முடிவு தெரியபடுத்தப்படும். அதுவரை பூட்டுபோடப்பட்ட ஏடிஎம் மையங்கள் இயங்க அனுமதி இல்லை என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai