சுடச்சுட

  

  ஏடிஎம் மையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வங்கிகளுக்கு உத்தரவு: உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ்

  By dn  |   Published on : 27th November 2013 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏடிஎம் மையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.

  பெல்காம் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது பாஜக உறுப்பினர் சுரேஷ்குமாரின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். மேலும் அவர் கூறியது: பெங்களூருவில் பல்வேறு வங்கிகளின் 2500 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இதில் 1900 ஏடிஎம் மையங்களில் மட்டுமே பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மீதம் உள்ள மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்துத்தரப்படவில்லை. எனவே பெங்களூரு மாநகர காவல்த்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் 1100 ஏடிஎம் மையங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. ஏடிஎம் மையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்பட்சத்தில் பூட்டு போடப்பட்டுள்ள ஏடிஎம் மையங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். இது குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்டவர்களுடன் 3 முறை ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் மையங்கள், தங்கநகை விற்பனை கடைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழங்குவது குறித்து அறிக்கை தரும்படி உள்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 45 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு குழுவிடம் அறிவுறத்தப்பட்டுள்ளது. அறிக்கைக்குப் பிறகு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai