சுடச்சுட

  

  பெங்களூருவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

  பெங்களூரு ஆடுகோடி முனி சென்னப்பா பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் ஜெயகிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான 2 அடுக்கு கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டடம் இடிந்து விழுந்ததில் இடுபாடுக்கிடையில் சிக்கி பத்மாவதி (45), மஞ்சு (43), 3 வயது குழந்தை சவிதா உள்பட உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மல்காசிங் (22), போலாசிங் (20) உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த ராஜ்வீர் சிங், ரத்னம்மா ஆகியோரை தீயணைப்படையினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்தை பெங்களூரு மேயர் சத்தியநாராயணா, ஆணையர் லட்சுமிநாராயணா பார்வையிட்டு, உயிரிழிந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதில் கூறினர். பின்னர் மேயர் செய்தியாளர்களிடம் கூறியது: கட்டடம் இடிந்ததில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பெங்களூருவில் மண் சுவரில் கட்டப்பட்டுள்ள பழமையான கட்டடங்கள் நிறைய உள்ளன. அதுபோன்ற கட்டடங்கள் கனமழைக்கு இடிந்து விழுந்து விடுகின்றன. 40 ஆண்டுகளையும் கடந்து, மண் சுவர்களால் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை கண்டறிந்து அதனை இடிக்குமாறு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன்.கட்டடம் இடிந்து 5 பேர் இறக்க காரணமான கட்டட உரிமையாளருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார் அவர்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai