Enable Javscript for better performance
சுரங்க முறைக்கேட்டில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: முதல்வர் சித்தராமையா- Dinamani

சுடச்சுட

    

    சுரங்க முறைக்கேட்டில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: முதல்வர் சித்தராமையா

    By dn  |   Published on : 27th November 2013 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுரங்க முறைகேட்டில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    பெல்காமில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டரின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். மேலும் அவர் கூறியது: கர்நாடகத்தில் சுரங்க முறைகேடு நடந்துள்ளதாக லோக் ஆயுக்த அளித்த அறிக்கையின் பேரில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி பிரிவில் உள்ள 51 சுரங்க நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பி பிரிவில் உள்ள சுரங்க நிறுவனங்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி முறைகேடு செய்வதாக வரும் புகார்கள் மீதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுரங்க முறைக்கேட்டில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. எங்கள் அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற 6 மாதத்தில் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்ட பலர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் லோக் ஆயுக்த சுரங்க முறைகேடு குறித்து அறிக்கை தாக்கல் செய்த பிறகும் 2 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த முந்தைய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் எழுந்து நின்று, அரசுக்கு எதிராக கூச்சல் எழுப்பினர். அவர்களை சட்டப்பேரவை தலைவர் காகோடு திம்மப்பா சமாதானப்படுத்தினார். பின்னர் தொடர்ந்து பேசிய சித்தாராமையா, உரிமம் ரத்து செய்யப்பட்ட 51 சுரங்க நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பெல்காம் மாவட்டம் ராயபாக வட்டம் குடிச்சியில் முறைகேடாக கற்களை வெட்டி எடுப்பதாக புகார் வந்துள்ளது. அது போன்று அங்கு முன்பு நடந்தது. ஆனால் தற்போது அங்கு முறைகேடாக எதுவும் நடைபெறவில்லை என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai