செல்பேசி மூலம் பிஎஸ்என்எல் கட்டணம் செலுத்தும் வசதி
By dn | Published on : 27th November 2013 02:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பிஎஸ்என்எல் கட்டணங்களை செலுத்துவதற்காக செல்பேசி அடிப்படையிலான புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக பிஎஸ்என்எல் வட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசி கட்டணங்களைச் செலுத்துவதற்காக செல்பேசி அடிப்படையிலான மை பிஎஸ்என்எல் ஆப் என்ற புதிய ஆப்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆப்-ஐ ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோர், கூகுள் ஸ்டோர், விண்டோஸ் ஆப் ஸ்டோரில் தர விறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் செல்பேசி மற்றும் தொலைபேசி பில் தொகைகளை கடன் அட்டை, டெபிட் அட்டை, நெட் பேங்கிங் அல்லது பிஎஸ்என்எல் டிரஸ்ட் கார்டு மூலம் செலுத்தலாம்.
அதேபோல, செல்பேசி எண்களுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். செலுத்த வேண்டிய கட்டணத் தொகை, பணம் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டு, சிறப்புக் கட்டணச் சீட்டுகளையும் இந்த ஆப் மூலம் காணலாம். பணம் செலுத்தியதற்கான ஒப்புகை குறுந் தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.bsnl.co.in என்ற இணைய தளத்தில் காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.